வாருமையா போதகரே / Vaarumaiyaa Podhagarae / Varumaiya Pothagare

வாருமையா போதகரே / Vaarumaiyaa Podhagarae / Varumaiya Pothagare

1
வாருமையா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்
சேருமையா பந்தியினில்
சிறியவராம் எங்களிடம்

2
ஒளி மங்கி இருளாச்சே
உத்தமனே வாருமையா
களித்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்வாய்

3
ஆதரையிலென் ஆறுதலே
அன்பருக்குச் சதா உறவே
பேதையர்க்குப் பேரறிவே
பாதை மெய் ஜீவ சற்குருவே

4
நாமிருப்போம் நடுவிலென்றீர்
நாயனுன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே நலம் தருவாய்

5
உந்தன் மனை திருச்சபையை
வையமெங்கும் வளர்த்திடுவாய்
பந்த மற பரிகரித்தே
பாக்கியமளித் தாண்டருள்வாய்

6
பாடும் தேவதாசரின் கவி
பாரினில் கேட்டனுதினமும்
தேடும் தொண்டர் துலங்கவுந்தன்
திவ்ய ஆவி தந்தருள்வாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!