பாவியாகவே வாறேன் / Paaviyagave Vaaraen / Paaviyagave Vaaren

பாவியாகவே வாறேன் / Paaviyagave Vaaraen / Paaviyagave Vaaren

பாவியாகவே வாறேன் பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே வாறேன்

1
பாவக்கறை போமோ என் பாடால் ? உன் பாடாலன்றிப்
போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான்

பாவியாகவே வாறேன் பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே வாறேன்

2
நீ வா உன் பாவம் என்னால் நீங்கும் என்று சொன்னீரே
தேவா உன் வாக்கை நம்பி சீர்கேடன் நீசனும் நான்

பாவியாகவே வாறேன் பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே வாறேன்

3
பேய் மருள் உலகுடல் பேராசையால் மயங்கிப்
போயும் அவற்றோடு போரில் அயர்ச்சியாய் நான்

பாவியாகவே வாறேன் பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே வாறேன்

4
ஜீவ செலவ ஞான சீல சுகங்கள் அற்றேன்
தாவென்று வேண்டிய சாவில் சஞ்சரித்த நான்

பாவியாகவே வாறேன் பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே வாறேன்

5
துன்பங்கள் நீக்கி உன்னைத் தூக்கி அணைப்பேன் என்றீர்
இன்ப வாக்குத்தத்தத்தை இன்றைக்கே நம்பியே நான்

பாவியாகவே வாறேன் பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே வாறேன்

6
உன்னைச் சேர ஒட்டாமல் ஊன்றியே தடை யாவும்
உன்னன்பால் நீங்கி நல உயிர் அடைந் தோங்கவே நான்

பாவியாகவே வாறேன் பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே வாறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!