ஆண்டவர் நம் இயேசுவை | Aandavar Nam Yesuvai / Andavar Nam Yesuvai
1
ஆண்டவர் நம் இயேசுவை ஆயிரம் துதிகளாலும்
ஆண்டவர் நம் இயேசுவை ஆயிரம் துதிகளாலும்
ஆர்ப்பரித்து போற்றிட நாம் ஆயத்தமல்லோ
ஆவியின் சந்தோஷமே எமக்களித்தாரே
ஆவியின் சந்தோஷமே எமக்களித்தாரே
ஆதியும் நீரே என் அந்தமும் நீரே
ஆதியும் நீரே என் அந்தமும் நீரே
மாறிடா நேசரே எந்தன் இயேசுவே
மாறிடா நேசரே எந்தன் இயேசுவே
2
எண்ணில்லா எம் துன்பங்கள் எங்கு போய் ஒழிந்ததோ
எண்ணில்லா எம் துன்பங்கள் எங்கு போய் ஒழிந்ததோ
எம்முள்ளந்தான் நன்றியால் நிறைந்து பொங்குதே
ஏகமாய் எல்லோரும் கூடி ஸ்தோத்தரிப்போமே
ஏகமாய் எல்லோரும் கூடி ஸ்தோத்தரிப்போமே
ஆதியும் நீரே என் அந்தமும் நீரே
ஆதியும் நீரே என் அந்தமும் நீரே
மாறிடா நேசரே எந்தன் இயேசுவே
மாறிடா நேசரே எந்தன் இயேசுவே
3
சுயாதீன ஆவியால் சிலர் சத்தியம் விட்டோடினும்
சுயாதீன ஆவியால் சிலர் சத்தியம் விட்டோடினும்
சக்தியீந்து சாட்சியாக இன்றும் நிலைக்க
பக்தியில் வைராக்கியம் எமக்களித்தாரே
பக்தியில் வைராக்கியம் எமக்களித்தாரே
ஆதியும் நீரே என் அந்தமும் நீரே
ஆதியும் நீரே என் அந்தமும் நீரே
மாறிடா நேசரே எந்தன் இயேசுவே
மாறிடா நேசரே எந்தன் இயேசுவே
4
இயேசு எம் பட்சம் நிற்க ஈன சாத்தானும் தோற்க
இயேசு எம் பட்சம் நிற்க ஈன சாத்தானும் தோற்க
ஆர்ப்பரிப்போடாரவாராம் எங்கும் தொனிக்க
அல்லேலூயா வல்லமையாய்ப் பாடிடுவோமே
அல்லேலூயா வல்லமையாய்ப் பாடிடுவோமே
ஆதியும் நீரே என் அந்தமும் நீரே
ஆதியும் நீரே என் அந்தமும் நீரே
மாறிடா நேசரே எந்தன் இயேசுவே
மாறிடா நேசரே எந்தன் இயேசுவே
5
இடுக்கமான வழியே இன்பக் கானான் ஏகவே
இடுக்கமான வழியே இன்பக் கானான் ஏகவே
இன்னும் அவரோடு கூடப் பாடு சகிப்போம்
இன்றும் என்றும் இயேசுவோடு ஆட்சி செய்வோமே
இன்றும் என்றும் இயேசுவோடு ஆட்சி செய்வோமே
ஆதியும் நீரே என் அந்தமும் நீரே
ஆதியும் நீரே என் அந்தமும் நீரே
மாறிடா நேசரே எந்தன் இயேசுவே
மாறிடா நேசரே எந்தன் இயேசுவே
6
உன்னத மா தேவனின் உயர்ந்த செட்டைகளின் கீழ்
உன்னத மா தேவனின் உயர்ந்த செட்டைகளின் கீழ்
தஞ்சமென அஞ்சிடாமல் தங்கி வாழுவோம்
தீங்கு நாட்கள் தீவிரம் எம் முன் நெருங்கிற்றே
தீங்கு நாட்கள் தீவிரம் எம் முன் நெருங்கிற்றே
ஆதியும் நீரே என் அந்தமும் நீரே
ஆதியும் நீரே என் அந்தமும் நீரே
மாறிடா நேசரே எந்தன் இயேசுவே
மாறிடா நேசரே எந்தன் இயேசுவே
7
எருசலேமே ஆர்ப்பரி சீயோனே நீ கெம்பீரி
எருசலேமே ஆர்ப்பரி சீயோனே நீ கெம்பீரி
ஆயிரம் பதினாயிரம் விண் தூதருடனே
ஆசை மணவாளன் இயேசு தாம் வருகிறார்
ஆசை மணவாளன் இயேசு தாம் வருகிறார்
ஆதியும் நீரே என் அந்தமும் நீரே
ஆதியும் நீரே என் அந்தமும் நீரே
மாறிடா நேசரே எந்தன் இயேசுவே
மாறிடா நேசரே எந்தன் இயேசுவே
