எந்தன் ஜீவன் இயேசுவே / Endhan Jeevan Yesuve / Enthan Jeevan Yesuve

எந்தன் ஜீவன் இயேசுவே / Endhan Jeevan Yesuve / Enthan Jeevan Yesuve

1   
எந்தன் ஜீவன் இயேசுவே
சொந்தமாக ஆளுமே
எந்தன் காலம் நேரமும்
நீர் கையாடியருளும்

2   
எந்தன் கை பேரன்பினால்
ஏவப்படும் எந்தன் கால்
சேவை செய்ய விரையும்
அழகாக விளங்கும்

3   
எந்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவும் என் வாய்
மீட்பின் செய்தி கூறவும்
ஏதுவாக்கியருளும்

4   
எந்தன் ஆஸ்தி தேவரீர்
முற்றும் அங்கீகரிப்பீர்
புத்தி கல்வி யாவையும்
சித்தம்போல் பிரயோகியும்

5   
எந்தன் சித்தம் இயேசுவே
ஒப்புவித்துவிட்டேனே
எந்தன் நெஞ்சில் தங்குவீர்
அதை நித்தம் ஆளுவீர்

6   
திருப்பாதம் பற்றினேன்
எந்தன் நேசம் ஊற்றினேன்
என்னையே சமூலமாய்
தத்தம் செய்தேன் நித்தமாய்

எந்தன் ஜீவன் இயேசுவே / Endhan Jeevan Yesuve / Enthan Jeevan Yesuve

எந்தன் ஜீவன் இயேசுவே / Endhan Jeevan Yesuve / Enthan Jeevan Yesuve

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!