நல் மீட்பர் இயேசு நாமமே / Nal Meetpar Yesu Naamame / Nal Meetpar Yesu Namame

நல் மீட்பர் இயேசு நாமமே / Nal Meetpar Yesu Naamame / Nal Meetpar Yesu Namame

1           
நல் மீட்பர் இயேசு நாமமே
என் காதுக்கின்பமாம்
புண்பட்ட நெஞ்சை ஆற்றவே
ஊற்றுண்ட தைலமாம்

2   
அந்நாமம் நைந்த ஆவியை
நன்றாகத் தேற்றுமே
துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை
திடப்படுத்துமே

3   
பசித்த ஆத்துமாவுக்கு
மன்னாவைப் போலாகும்
இளைத்துப் போன ஆவிக்கு
ஆரோக்கியம் தந்திடும்

4   
என் ரட்சகா என் கேடகம்
என் கோட்டையும் நீரே
நிறைந்த அருள் பொக்கிஷம்
அனைத்தும் நீர்தாமே

5   
மா நேசர் மேய்ப்பர் பர்த்தாவும்
என் ஜீவனும் நீரே
என் தீர்க்கரும் என் ராஜாவும்
ஆசாரியருமே

6   
என் நெஞ்சின் ஊக்கம் அற்பந்தான்
என் அன்பில் குளிர்ந்தேன்
உன் முகம் பார்க்கும்போதோ நான்
சீராகப் போற்றுவேன்

7   
இம்மையில் ஆயுள் முழுதும்
உம் அன்பைக் கூறுவேன்
உம் நாமத்தால் என் சாவிலும்
நான் ஆறித் தேறுவேன்

நல் மீட்பர் இயேசு நாமமே / Nal Meetpar Yesu Naamame / Nal Meetpar Yesu Namame

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!