நீ குருசில் மாண்ட கிறிஸ்துவை / Nee Kurusil Maanda Kristhuvai / Nee Kurusil Manda Kristhuvai


நீ குருசில் மாண்ட கிறிஸ்துவை
அறிக்கை பண்ணவும்
அஞ்சாவண்ணம் உன்நெற்றிமேல்
சிலுவை வரைந்தோம்


கிறிஸ்துவின் மாண்பைக் கூறவே
வெட்காதபடிக்கும்
அவரின் நிந்தைக் குறிப்பை
உன்பேரில் தீட்டினோம்


நீ கிறிஸ்துவின் செங்கொடிக்கீழ்
துணிந்து நிற்கவும்
சாமட்டும் நற்போராட்டத்தை
நடத்தும் படிக்கும்


நீ கிறிஸ்து சென்ற பாதையில்
நேராகச் செல்லவும்
நிந்தை எண்ணாமல் சிலுவை
சகித்தீடேறவும்


கிறிஸ்துவின் அடையாளத்தை
சபைமுன்னே பெற்றாய்
நீ அவர் குருசைச் சுமந்தால்
பொற்கீரிடம் பூணுவாய்

Don`t copy text!