நிரப்பும் என்னைத் துதியால் / Nirappum Ennai Thudhiyaal / Nirappum Ennai Thuthiyaal / Nirappum Ennai Thudhiyal / Nirappum Ennai Thuthiyal
1
நிரப்பும் என்னைத் துதியால்
முற்றாகக் கர்த்தரே
என் தேகம் மனம் ஆன்மாவும்
உம்மையே கூறவே
2
துதிக்கும் நாவும் உள்ளமும்
போதாதென் ஸ்வாமியே
என் வாழ்க்கை முற்றும் யாவுமாய்
துதியதாகவே
3
சாமானிய சம்பவங்களும்
என் போக்கும் வரத்தும்
மா அற்ப செய்கை வேலையும்
துதியதாகவும்
4
நிரப்பும் என்னை முற்றுமாய்
சமூலம் போற்றவும்
உம்மை உம் அன்பை ஏழையேன்
துதித்திடச் செய்யும்
5
பெறுவீரே நீர் மகிமை
என்னாலும் என்னிலும்
இம்மையிலே துடங்குவேன்
சதா விண் பாடலும்
6
கவலை கோபம் பயமும்
கீதமாய் மாறிடும்
என் ஜீவ பாதை யாவிலும்
கீதம் தொனித்திடும்
7
இராப் பகல் விநாடியும்
விளங்கும் தூய்மையாய்
என் வாழ்க்கை முற்றும் சேர்ந்திடும்
உம்மோடு ஐக்கியமாய்
