என் ஜீவன் கிறிஸ்துதாமே / En Jeevan Kristhuthaame / En Jeevan Kristhuthame
1
என் ஜீவன் கிறிஸ்துதாமே
அதாலே எனக்கு
என் சாவாதாயமாமே
நெஞ்சே மகிழ்ந்திரு
2
நான் இயேசு வசமாக
சேர்ந்தென்றும் வாழவே
மா சமாதானமாகப்
பிரிந்து போவேனே
3
பாடற்றுபோம் அந்நாளே
என் நோவும் முடியும்
என் மீட்பர் புண்ணியத்தாலே
மெய் வாழ்வு தொடங்கும்
4
நான் பேச்சு மூச்சில்லாமல்
குளிர்ந்து போயினும்
என் ஆவியைத் தள்ளாமல்
உம்மண்டை சேர்த்திடும்
5
அப்போது நான் அமர்ந்து
என் நோவை மறப்பேன்
உம் சாந்த மார்பில் சாய்ந்து
நன்கிளைப்பாறுவேன்
6
நான் உம்மைக் கெட்டியாக
பிடித்தும்முடனே
அநந்த பூரிப்பாக
வாழட்டும் இயேசுவே
