Tamil Christian Song Book Menu – Tamil

இயேசுவை சொல்லுவாம் / Yesuvai Solluvom

இயேசுவை சொல்லுவாம்
இதயத்தை வெல்லுவோம்
தேசத்தின் சாபங்களை
ஆசீர்வாதமாக்குவோம்

1
திசைகளை தேர்ந்தெடுக்க
கிதியோன்கள் வருவார்கள்
திசைகளை தேர்ந்தெடுக்க
கிதியோன்கள் வருவார்கள்

எழுப்புதல் விதைத்திட
எஸ்தர்கள் எழும்புவார்கள்
எழுப்புதல் விதைத்திட
எஸ்தர்கள் எழும்புவார்கள்

இயேசுவை சொல்லுவாம்
இதயத்தை வெல்லுவோம்
தேசத்தின் சாபங்களை
ஆசீர்வாதமாக்குவோம்

2
உலகத்தின் தலைவர்களின்
உள்ளங்களில் பேசுமையா
உலகத்தின் தலைவர்களின்
உள்ளங்களில் பேசுமையா

உம்மையே தெய்வம் என்று
உணர்ந்திட செய்யும் ஐயா
உம்மையே தெய்வம் என்று
உணர்ந்திட செய்யும் ஐயா

இயேசுவை சொல்லுவாம்
இதயத்தை வெல்லுவோம்
தேசத்தின் சாபங்களை
ஆசீர்வாதமாக்குவோம்

3
ஓடுகின்ற நதிகள் எல்லாம்
யோர்தானாய் மாறவேண்டும்
ஓடுகின்ற நதிகள் எல்லாம்
யோர்தானாய் மாறவேண்டும்

கடற்கரை ஓரமெல்லாம்
கலிலேயே ஆகவேண்டும்
கடற்கரை ஓரமெல்லாம்
கலிலேயே ஆகவேண்டும்

இயேசுவை சொல்லுவாம்
இதயத்தை வெல்லுவோம்
தேசத்தின் சாபங்களை
ஆசீர்வாதமாக்குவோம்

4
இமயம் குமரி வரை
இதயங்கள் ஒன்றாகும்
இமயம் குமரி வரை
இதயங்கள் ஒன்றாகும்

இயேசுவை ஏற்றுக் கொண்டால்
எல்லாமே நன்றாகும்
இயேசுவை ஏற்றுக் கொண்டால்
எல்லாமே நன்றாகும்

இயேசுவை சொல்லுவாம்
இதயத்தை வெல்லுவோம்
தேசத்தின் சாபங்களை
ஆசீர்வாதமாக்குவோம்

5
கானானை தந்தவரே
இந்தியாவை தாருமையா
கானானை தந்தவரே
இந்தியாவை தாருமையா

தேசத்தை ஒருங்கிணைத்து
திருச்சபை ஆக்குமையா
தேசத்தை ஒருங்கிணைத்து
திருச்சபை ஆக்குமையா

இயேசுவை சொல்லுவாம்
இதயத்தை வெல்லுவோம்
தேசத்தின் சாபங்களை
ஆசீர்வாதமாக்குவோம்

இயேசுவை சொல்லுவாம்
இதயத்தை வெல்லுவோம்
தேசத்தின் சாபங்களை
ஆசீர்வாதமாக்குவோம்

Don`t copy text!