ஆ இயேசுவே புவியிலே / Aa Yesuve Puviyile

ஆ இயேசுவே புவியிலே / Aa Yesuve Puviyile

1
ஆ இயேசுவே
புவியிலே
இருந்திரக்கமாக
அடியாரை
அங்கும்மண்டை
இழுத்துக்கொள்வீராக

2
இழும் இழும்
அடியார்க்கும்
பரகதி அளியும்
அப்போதெல்லா
உபத்ரவ
வருத்தமும் முடியும்

3
நீர் எங்களை
சேர்த்தும்மண்டை
போம் பாதையில் நடத்தும்
அடியார் கால்
தப்பாய்ப் போனால்
நீர் மோசத்தை அகற்றும்

4
இவ்வுலகம்
ஆகா தலம்
இழும் அடியார் தேடும்
தலம் பரம்
அங்கும்மிடம்
நீர் கொண்ட பேரைச் சேரும்

5
நீர் ரட்சகர்
நீர் மீட்டவர்
நீரே இம்மானுவேலும்
இரட்சியும்
இழும் இழும்
இவ்வேண்டுதலைக் கேளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!